AirDroid, a fast & free app that lets you wirelessly manage your Android device from a web browser: http://goo.gl/TPnBJ
சனி, 1 செப்டம்பர், 2012
செவ்வாய், 12 அக்டோபர், 2010
மும்பை : சொகுசு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ. வாகன கடன்கள் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றை தொடங்குகிறது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பிஎம்டபிள்யூ. குழுமம் ஏற்கனவே, சர்வதேச அளவில், பிஎம்டபிள்யூ. பைனான்ஷியல் சர்வீசஸ் என்ற துணை நிறுவனத்தின் வாயிலாக மோட்டார் வாகன கடன்கள் பிரிவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக இந்திய சந்தையில் களமிறங்க இப்போது தயாராகி உள்ளது. வாகன கடன் வசதி நிறுவனம், குர்கானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும். தொடக்கத்தில் இதற்காக 5 கோடி டாலர் (சுமார் ரூ.225 கோடி) முதலீடு செய்யப்பட உள்ளது. |
செவ்வாய், 24 மார்ச், 2009
கனிகளின் சிகரம் பப்பாளி
கனிகளின் சிகரம் பப்பாளி. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் மரம் இது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துக்களை வாரிவழங்கும் பழம் இது. கருவை காக்கும் பழமாக இருப்பதைப் போலவே கருவை அழிக்கும் பழமாகவும் இது இருக்கிறது. பப்பாளிப்பழத்தில் இருபதுக்கும் அதிகமான சத்துக்கள் உள்ளன. இதன் பழம், காய், பால், விதை அனைத்தும் மருத்துவப் பண்புகளைக்கொண்டது. வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பழம் இது. மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இந்த பழத்திற்கு உண்டு. பப்பாளிக்காய்களை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.பப்பாளியை பயிர்செய்வதற்கு தனியாக கவனம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. பப்பாளி மரங்களை கழிவுநீரில் வளர்த்தால் அதன் குணங்கள் குறையக்கூடும். கன்று வளர்ந்து ஒரு வருடத்தில் பழங்களைத்தரத்தொடங்கும். கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை பலன் கொடுக்கும்.பப்பாளியில் மூன்று வகைகள் உண்டு. ஆண் மரம், பெண் மரம், அலிமரம். ஆண் மற்றும் அலிமரத்தின் பூக்கள் சிறிதாய் இருக்கும். ஆண் மரத்தின் பூக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. அலிமரத்தின் பூக்களால் எந்தப்பயனும் இல்லை. பெண்மரத்தின் மலர்கள் பெரியதாக இருக்கும்; காய்களும் பெரியதாக சுவை கூடியும் இருக்கும். செம்மண் பூமியில் நன்றாக வளரும் மரம் இது. பப்பாளி மரத்தின் தண்டுகள் வலிமை குறைந்தவை. பப்பாளிப் பழங்களை சேதமில்லாமல் பறிக்க சற்று நிதானமும் எச்சரிக்கையும் தேவை.நன்றி: கலைக்கதிர்தகவல்: மு.குருமூர்த்தி
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...
ஞாயிறு, 22 மார்ச், 2009
குட்டீஸ்
படிக்கத் தெரியாத வாண்டு
மிருகக்காட்சி சாலையும் பையனும்
கடவுளைத் திருடியவர்கள்
உங்களுக்கு என்ன தெரியுது?
நல்லா(ஆப்)படிக்கனும்
ஆசிரியரும் கோழியும்
தாமதமாக வந்த மாணவி
போரடிக்கும் மனிதர்
காலை சாப்பாடும் பிரார்த்தனையும்
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யாரு?
சொர்க்கமா நரகமா?
எக்குதப்பான பதில்
மகாபாரதத்தில் சந்தேகம்
எந்த முனை சார்?
முழு லூசு வாத்தியார்
காந்தியும், ஆகஸ்ட் 15ம்
படிக்கத் தெரியாத வாண்டு
மிருகக்காட்சி சாலையும் பையனும்
கடவுளைத் திருடியவர்கள்
உங்களுக்கு என்ன தெரியுது?
நல்லா(ஆப்)படிக்கனும்
ஆசிரியரும் கோழியும்
தாமதமாக வந்த மாணவி
போரடிக்கும் மனிதர்
காலை சாப்பாடும் பிரார்த்தனையும்
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது யாரு?
சொர்க்கமா நரகமா?
எக்குதப்பான பதில்
மகாபாரதத்தில் சந்தேகம்
எந்த முனை சார்?
முழு லூசு வாத்தியார்
காந்தியும், ஆகஸ்ட் 15ம்
சனி, 14 மார்ச், 2009
அன்புடன்பர்ஹானா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)