
மும்பை : சொகுசு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ. வாகன கடன்கள் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றை தொடங்குகிறது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பிஎம்டபிள்யூ. குழுமம் ஏற்கனவே, சர்வதேச அளவில், பிஎம்டபிள்யூ. பைனான்ஷியல் சர்வீசஸ் என்ற துணை நிறுவனத்தின் வாயிலாக மோட்டார் வாகன கடன்கள் பிரிவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக இந்திய சந்தையில் களமிறங்க இப்போது தயாராகி உள்ளது. வாகன கடன் வசதி நிறுவனம், குர்கானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும். தொடக்கத்தில் இதற்காக 5 கோடி டாலர் (சுமார் ரூ.225 கோடி) முதலீடு செய்யப்பட உள்ளது. |